நம்மில் பலருக்கு உணவு வகைகளைப் பதப்படுத்தும் முறை தெரிவதில்லை . குளிர்சாதனப் பெட்டி வாங்குவதில் செலுத்தும் கவனத்தை , அதனால் அடையும் பலன்களிலும் செலுத்தினோம் என்றால் காய்கறிகள் , பழங்கள் நெடுநாளைக்கு இருக்கும் .
1. ஐஸ் ட்ரியில் ஊற்றிப் பதப்படுத்துவது .
2. டப்பாக்களில் வைத்துப் பதப்படுத்துவது .
3. என்ன வகை உணவைப் பதப்படுத்துகிறோம் என்று பெயரிட்டு வைப்பது .
4. பொலித்தீன் பைகளில் வைத்துப் பதப்படுத்துவது .
5. ஃபாயில் பேப்பர் கொண்டு மூடி வைப்பது .
இன்னொரு முக்கியமான விடயம் குறித்த நேரத்துக்கு காய்கறிகளைப் சுடுதண்ணீரில் போட்டு வைப்பது .இப்படி செய்வதால் அதனுடைய கிருமிகள் அழிவதோடு வைட்டமின் சத்தும் பாதுகாக்கப்படுகிறது . கூடவே சுவையும் குறையாமல் பாதுகாக்க முடியும் .
முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை ஒவ்வொரு வகையான காய்கறியை குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டடுமே சுடூரில் போட்டு எடுக்க வேண்டும் .
இப்பொது நாம் எப்படி பல வகையான காய்கறிகளைப் பதப்படுத்துவது என்பதைப் பார்ப்போம் .
பீன்ஸ் :இளசாகப் பார்த்து வாங்கி நுனிகளை வெட்டி எடுக்கவும்.பின் இரண்டு நிமிடம் சுடுநீரில் போட்டு வடிகட்டி , ஆறவைத்து நன்கு துடைத்து உலர்த்தி ஃப்ரிஸ் செய்யவும்.
குடை மிளகாய் : நன்கு கழுவி விதைகள் நீக்கி , துண்டுகளாக்கி மூன்று நிமிடம் சூடுநீரில் கழுவி எடுத்து , ஆறவைத்து துடைத்து ஃப்ரிஸ் செய்யவும் .
பச்சைப் பட்டாணி : நல்ல பிஞ்சாகப் பார்த்து வாங்கி தோல் நீக்கி, சுடுநீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து , பின் பொலித்தீன் பைகளில் ஃப்ரிஸ் செய்யவும் .
காலி ஃப்ளவர் : சிறு சிறு பூக்களாகப் பிரித்தெடுத்து , சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து , மூன்று நிமிடம் சுடுநீரில் கழுவி வடிகட்டி , ஈரம் போகத் துடைத்து ஃப்ரிஸ் செய்யவும் .
வெந்தயக்கீரை:உப்பு சேர்த்து ஒரு நிமிடம் குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யவும் .ஈரம் போக நன்றாகப் பிழிந்து எடுத்து ,பொலித்தீன் பைகளில் போட்டு ஃப்ரிஸ் செய்யவும். சுடுநீரில் கழுவ தேவையில்லை ..
காளான் : பட்டன் காளான்களை வெண்ணெயில ஒரு நிமிடம் வதக்கி ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிஸ் செய்யவும் . சுடுநீரில் கழுவ தேவையில்லை .
வெங்காயம் : தோலுரித்து , சுடுநீரில் கழுவி பின் பிளாஸ்ட்டிக் டப்பாக்களில் வைத்து ஒரு துணியில் சுற்றி ஃப்ரிஸ் செய்யவும்.
தக்காளி :ஐந்து நிமிடம் சுடுநீரில் போட்டு கழுவி எடுத்து . ஆறவைத்து, பின் பொலித்தீன் பைகளில் போட்டு ஃப்ரிஸ் செய்யவும் .
இந்த முறையில் நாம் பல வகையான காய்கறிகளைப் பதப்படுத்தி மாதக்கணக்கில் பயன்படுத்தலாம் .எந்த நோய்களும் நம்மை தாக்காது . ஆரோக்கியமாக வாழலாம்.