அதாவது சர்க்கரை நோயாளிகளின் உடல் எப்பொழுதுமே
கபம் சார்ந்தும் , பித்தம் சார்ந்தும் அதிகமாக இருக்கும் .
வில்வம் குளிர்ச்சியை தரக்கூடியது . வில்வம் உடம்பின்
வெப்பத்தை தடுக்க கூடியது . அதாவது அதிகம் குளிர்ச்சியை
ஏற்படுத்தாது வில்வம் . சாதாரணமான குளிர்ச்சியை கொடுக்க
கூடியது வில்வம் . சர்க்கரை நோயாளிகளுக்கு பசியின்மை
இருக்கும் , இது ஒருவகையானது . சில சர்க்கரை நோயாளிகளுக்கு
அதிகப்படியான பசி ஏற்படும் இது ஒருவகையான பிரச்சினை .
பசியை கூட்டக்கூடிய தன்மை இந்த வில்வத்தில் உண்டு .
நல்ல செரிமானம் செய்யக்கூடியது இந்த வில்வம் . நமது
உடலில் சத்துக்கள் முழுமையாக உறிஞ்சி , தேவையான
அளவு ஜீரணம் ஆனாலே , சர்க்கரை நோயின் அளவு
கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் . சர்க்கரை நோய் என்றாலே ,
ஒரு வளர்சிதை மாற்றம் அதனால், அதனை சீர் செய்யும்
தன்மை இந்த வில்வத்தில் காணப்படுகின்றது .
இந்த வில்வம் மலம் இலக்கியாகவும் செயல்படுகின்றது .
பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மலர்ச்சிக்கல்
இருக்கும் . ஒருவாரம் மலர்ச்சிக்கல் அல்லது ஒரு நாள்
விட்டு ஒருநாள் , அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
மலர்ச்சிக்கல் ஏற்படும் . அதாவது மலர்ச்சிக்கல் இருந்தாலே
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வராது . அந்த மலர்சிக்கலை
கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இந்த வில்வ இலைக்கு உண்டு .
அதாவது , வில்வ இலை மட்டும் பயன் தரக்கூடியது அல்ல
வில்வத்தின் எல்லா பாகங்களும் மருந்தாக பயன்தரக்கூடியது .
குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு , கை கால் எரிச்சல் ,
மதமதப்பு , கை குத்தல் , கை கால் மறுத்துப்போதல் இவ்வாறான
பிரச்சினைகளுக்கு வில்வ இலை மிகசிறந்த மருந்தாகும் .
அனைத்துவகையான மேக நோய்களையும் கட்டுப்படுத்தும் .
தோல் நோய்களில் இருந்து , பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் வெள்ளைப்படுதல் , பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டி (pcos ) முதல் கொண்டு சர்க்கரை நோய் வரை எல்லா மேக நோய்களையும் குணப்படுத்தக்கூடியது வில்வம் . வில்வத்தினுடைய இளம் தளிர்.
அதன் பூ கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது . அதனுடைய
பிஞ்சு வயிற்று புண்களை ஆற்றகூடியதாக இருக்கும் . அதன்
பழம் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தி , பார்வை தெளிவுற
செய்கின்றது . வில்வ மரத்தின் ,அதில் வரும் பால் அதாவது கம் , அது ஆண்மை தன்மையை அதிகரிக்க கூடியது , பெண்களின்
கருமுட்டை வளர்ச்சியை சீர் படுத்தக்கூடியதாகவும் இது இருக்கிறது
இவ்வளவு நன்மை தருகின்றது வில்வம் .
அதைத்தவிர, அறிவியல் ஆராச்சியாளர்கள் வில்வத்தை பற்றி கூறுகின்றார்கள் கணையத்தில் உள்ள பீற்றா செல்களை நல்ல முறையில் வேலை செய்து அதை புதுப்பிக்க உடைய தன்மையுடையதாக இருக்கும் . சர்க்கரை நோயாளிகளுக்கு உடல்
இளைப்பை ஏற்படுத்துகின்றன . அதனை தடுக்க கூடிய மிக சிறந்த
மூலிகைகளில் ஒன்று இந்த வில்வம் . அதாவது சர்க்கரை நோய்க்கு
எடுக்க கூடிய மாத்திரைகளின் மூலம் , பக்கவிளைவுகளும் அதிகமாக காணப்படுகின்றது . சர்க்கரை நோய் முற்றிய நிலையில்
ஏற்படக்கூடிய ஒரு பக்கவிளைவின் காரணமாக சிறுநீரக பாதிப்பு
ஏற்படும் . அதனை சரி செய்யக்கூடியது வில்வம் . கல் ஈரலின்
செயல்திறனை சீர் படுத்தக்கூடிய தன்மை இதற்கு உண்டு .
வில்வ இலை காய்ந்தாலும் அதன் தன்மை மாறாமல் மருத்துவ
குணத்துடன் காணப்படும் . தினமுமே வில்வ இலையை பயன்படுத்தலாம் . சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்து கொண்டிருந்தாலும் வில்வ இலையை பயன்படுத்தலாம் .
எவ்வாறு எடுக்கலாம் என்றால் , இரவில் ஐந்து வில்வ இலைகளை
தண்ணீரில் போட்டு வைத்து காலையில் இலையை மென்று
சாப்பிட வேண்டும் . இது கை கால் மறுத்துப்போதல் போன்ற
பிரச்சினைகளை சரி செய்யும் . ஒரு கைப்பிடி வில்வ இலைகளை
தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அத்துடன் இரண்டு மிளகு சேர்த்து , 50ml வந்தவுடன் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் .