பாறை மீன்
பாறை மீனில் பல வகைகள் இருக்கின்றன . அதில் பாறை மீன் ,
தேங்காய்ப்பாறை , முயல்ப்பாறை , சொரிபாறை ஆகியவைகள்
காணப்படுகின்றன . இதில் தேங்காய்ப்பறை மீன் முதலிடம் .
இந்த பாறை மீன்களின் சுவையும் மிகவும் அதிகம் . சீக்கிரம்
செரிமானம் அடையக்கூடியது . இந்த மீன்களிலின் சதைகள்
மிகவும் மென்மையாக இருக்கும் . அதிகம் சத்துக்கள் நிறைந்தது .
ஆனால் , இந்த மீன் வகைகளில் சொரி பாறை மீன் என்ற , ஒரு
வகை உண்டு அதை சாப்பிட்டால் உடல் சூடு ஏற்படும் .
கண்கள் சிவந்து விடும் .
கானாங்கெளுத்தி
கானாங்கெளுத்தி மீனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்
மன அழுத்தத்தில் இருப்பவர்கள் குணமடைவார்கள் .
இதனை தினமுமே சாப்பிடுவது மிகவும் சிறந்தது .
அதைத்தவிர மற்ற சத்துக்களும் நிறைந்து
காணப்படுகின்றது .
சுறா
சுறா மீன் மிகவும் சுவையானது . கல்சியம் அதிகம்
நிறைந்தது . இந்த சுறா மீனில் கொழுப்பு கிடையாது .
நன்கு செரிமானம் ஆகக்கூடியது . தாய்ப்பால் கொடுக்கும்
தாய்மார்களுக்கு , தாய்ப்பால் அதிகரிக்க இந்த சுறா மீன்
சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும் .
மத்தி மீன்
பொதுவாக மீன்களில் மருத்துவம் குணங்கள் அதிகம் .
இந்த மீனில் கல்சியம் , பாஸ்பரஸ் , பொட்டாசியம் , போன்ற
சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது . அதை தவிர
வைட்டமின் பி2 சத்துக்கள் காணப்படுகின்றது . இது நரம்பு
மண்டலத்தை சிறப்பாக செயல்படுத்த உதவும் . சர்க்கரை
நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
உதவும் . இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் .
கல்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் எலும்புகளை
பலப்படுத்தவும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவும் .
பாஸ்பரஸ் நிறைந்து இருப்பதால் எலும்புகள் நன்கு
வலிமை பெரும் .