கருப்பு கவுனி அரிசி
கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது
LDL என்ற கெட்ட கொலஸ்ட்ரோல் கொழுப்பின் அளவை
குறைக்க உதவுகிறது . இதனால் இருதய பிரச்சினைகளின்
அபாயத்தை குறைகிறது . இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த
தினமும் கருப்பு கவுனி அரிசி உட்கொள்வது அவசியம் .
குதிரைவாலி அரிசி
செரிமான பிரச்சினைகள் , இரத்த சோகை நோய் ஆகியவற்றை
சரி செய்யும் . கண் சம்பந்தமான பிரச்சினைகளையும் சரி செய்யும்.
பீற்றா கரோட்டின் இதில் அதிகமாக உள்ளது . இது ஆன்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது . ஊட்டச்சத்துக்கள்
நிறைந்தது குதிரைவாலி அரிசி . இதில் நார்சத்துக்களும்
மற்றும் இரும்பு சத்தும் அதிகளவு உள்ளது . இது உடலில்
ஏற்படும் மலச்சிக்கலையும் சரி செய்கிறது . கொழுப்பை
குறைக்க கூடியது . இதுமட்டு அன்றி தினமும் குதிரைவாலி
அரிசியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும் .