உருளைக்கிழங்கை விடவும் சர்க்கரைவள்ளி கிழங்கில் கலோரிகள்
அதிகம் . இதிலிருக்கும் கல்சியம் , பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள்
காணப்படுகின்றன . இந்த சத்துக்கள் எலும்புகள்
வலுப்பெற உதவும் . அதை தவிர வயது அதிகரிக்கும் போது பார்வை
குறைபாடுகள் ஏற்படும் . பார்வை மங்கும் , இந்த பிரச்சினைகளை
இந்த கிழங்கு சாப்பிடுவதால் சரியாகும் . சருமத்தில் சுருக்கம்
ஏற்படும் இதை சரி செய்து இளமையாக காட்டும் இந்த
சர்க்கரைவள்ளி கிழங்கு . உடலுக்கு தேவையான அனைத்து
சக்தியையும் கொடுக்கும் . இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை
சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் . இதில் கலோரிகள்
அதிகம் . உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் இதனை
சாப்பிடலாம் . அதை தவிர சர்க்கரை நோய் உள்ளவர்கள்
இதனை சாப்பிடலாம் . சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருக்கும்
கரோட்டீனைஸ் , பிற்றாகரோட்டின் உள்ளிட்ட சில
சத்துக்கள் சிலவகையான நோய்க்கிருமி தாக்கங்கள்
ஏற்படாமல் தடுக்கும் .