அதாவது  ஏன்  குறிப்பாக  பெண்களுக்கு  மட்டும்  அடி  வயிறு 

தொப்பை  ஏற்படுகிறது ?

அதற்கு  முக்கியமான  ஆர்மோன்  ஈஸ்ட்ரோஜன்   அதை  தவிர 

மன  அழுத்தம் ,  சரியான  தூக்கமின்மை , மாதவிடாய்  பிரச்சினைகள் 

போன்ற  முக்கியமான  காரணங்களால்  தான்  பெண்களுக்கு  

அடி  வயிற்று  தொப்பை  ஏற்படுகின்றது . 

இந்த  ஆர்மோன்  ஏன்  காரணமாகின்றது  என்றால் , 

உடம்பில்  நிறைய  உப்புநீர்  தங்கிருப்பது  போல  ஒரு உணர்வு  ஏற்படும் .

சில  நாட்கள்  வயிறு  சிறியதாக  இருக்கும் . சில  நாட்கள்  வயிறு 

பெரிதாக  இருப்பது .  இது  ஈஸ்ட்ரோஜன்  ஆர்மோன்  காரணமாகும்.

கர்ப்பகாலத்திலும்  , தாய்ப்பால்  ஊட்டும்  காலத்திலும்  பெண்களின் 

உடலுக்கு  நிறைய  சக்தி  தேவைப்படுகின்றது .  அதனால்  என்ன 

நடக்கும்  என்றால் ?   கர்ப்பகாலத்தில்  , தாய்ப்பால்  கொடுக்கும் 

காலங்களிலும்  வயிறு , இடுப்பு , தொடை  ஆகிய  இடங்களில் 

கொழுப்பு   சிறிது  சிறிதாக  சேர்த்து  காணப்படும் .  அதன்  பின் 

தாய்ப்பால்  கொடுத்து  நிறுத்திய  பிறகு  இருக்கும்  காலங்களில் 

இந்த  குறிப்பிட்ட  இடங்களில்  இருந்த  கொழுப்புகள்  அனைத்தும் 

மெதுவாக  அடிவயிற்றை  வந்து  சேர்ந்து  விடும் . 

அதே  போல  மாதவிடாய்   முடிந்த  பிறகு , நமக்கு  உடம்பில்  எங்கு 

எல்லாம்  கொழுப்பு  இருந்ததோ , ஈஸ்ட்ரோஜன்  குறைந்த  பிறகு 

அடிவயிற்றில்   கொழுப்புகள்  வந்து  சேர்ந்து  விடும் . அதனால்  

நிறைய  பெண்களுக்கு  45 வயதிற்கு  மேல்  தொப்பை  வருகின்றது 

என்றால் , ஈஸ்ட்ரோஜன்  ஆர்மோன்  காரணம்  ஆகும் . மாதவிடாய் 

காலங்களுக்கு  பின்  ஈஸ்ட்ரோஜன்  குறைந்த  பின்  அடி  வயிற்றில் 

தொப்பை  ஏற்படுகிறது .  

பிரசவக்காலத்திற்கு  பிறகு  தொப்பை  ஏற்படுவது ,  நம்  உடலில் 

உள்ள  சத்துக்கள்  அனைத்தும்  கரைந்து  முடிந்த  பின் ,  மீதியாக 

இருக்கும்  கொழுப்புகள்  அடிவயிற்றில்  வந்து  சேர்வதனால் . 

இவைகள்தான்  அடிவயிற்று  தொப்பைக்கான  காரணங்கள்  ஆகும் .

இதேபோல  ஆண்களுக்கும்  தொப்பை  ஏற்படுகின்றது .

அவர்களின்  டெஸ்ட்ரோஜன்  ஆர்மோன்  குறைந்த  பின்  

அடிவயிற்றில்  கொழுப்புகள்  போய்  தங்கிவிடுகின்றது . 

இதனால்  அடிவயிறு  தொப்பை  ஏற்படுகின்றது . 

இதனை  எவ்வாறு  சரி  செய்வது ?

சாதாரணமாக  நெல்லிக்காய்  ஜூஸ்  தினமும் குடிக்கலாம் .  மிகவும் 

சிறப்பான  ஜூஸ்  ஒன்று .  சிறுநீரகக்கற்கள்  உள்ளவர்கள்  மாத்திரம் 

வாரத்திற்கு  மூன்று  நாட்கள்  குடிக்கலாம் .  நெல்லிக்காய் -3, 

இஞ்சி -சிறிய துண்டு , கருவேப்பிலை – சிறிதளவு  அதனுடன் 

உப்பு சேர்த்து  குடிக்கலாம் .  இதனை  தினமும்  வெறும்  வயிற்றில் 

குடிக்கலாம்  அல்லது  உணவு  உண்ட  பின்பு  குடிக்கலாம் . 

இவ்வாறு  தினமும்  குடித்தால்  அடி வயிற்று  தொப்பை  மிக 

சீக்கிரமாக  குறைந்து  விடும் . 

அடுத்ததாக ,  நாட்டு  சுரைக்காயை  சிறிய  துண்டுகளாக  வெட்டி 

அதனை  ஆவியில்  அவித்து . அதனை  ஒரு  சூப்  ஆக  அரைத்து 

எடுத்து ,  அதனை  குடித்தால்  தொப்பை  குறையும் .  இது  தினமும் 

குடிக்கலாம் . வெகு  விரைவாக  தொப்பை  குறையும் .  இதனை  

வெறும்  வயிற்றிலும்  குடிக்கலாம்  அல்லது  சாப்பிட  பிறகும்  

குடிக்கலாம் . 

அதைத்தவிர ,  கருஞ்சீரகத்தை  பொடியாக்கி  வைத்து  கொள்ளவும் .

அதனை  1/2 டீஸ்பூன்  அல்லது  1/4 டீஸ்பூன்  எடுத்து ,  ஒரு  கப் 

தண்ணீரில்  கொதிக்க  வைத்து  அரைக்கப்  அளவு  கொதித்ததும் 

ஒரு  டீ  ஆக  குடிக்கலாம் .  உடல்  சூடு  அதிகம்  உள்ளவர்கள் 

இந்த  கருஞ்சீரகப்  பொடியை  மோரில்  கலந்து  குடிக்கலாம் .

பெண்கள்  மாதவிடாய்  காலங்களில்  தவிர  மற்ற  நாட்களில் 

குடிக்கலாம் .  மிகவும்  விரைவாக  அடிவயிற்று  தொப்பை  

குறையும் .  இத்தனையும்  வெறும்  வயிற்றில்  அல்லது  உணவிற்கு 

பின்பும்  குடித்து  வரலாம் . தினமும்  குடிக்கலாம் . 

இதைத்தவிர , சுண்டைக்காயை  வத்தலாக , குழம்பாகவும்  தினமும் 

உணவில்  சேர்த்து  சாப்பிடலாம் .  அடிவயிற்று  தொப்பை  குறையும்.

இவ்வாறு  சாப்பிடுவதாலும்  ஈஸ்ட்ரோஜன்  ஆர்மோனின்  பிரச்சினைகளும்  பெண்களுக்கு  சரியாகும் .  

அதை   தவிர , கடுக்காய் பொடி  1/2 டீஸ்பூன்  எடுத்து , 11/2 கப் 

தண்ணீரில்  கலந்து  நன்கு  கொதிக்க  வைத்து , நன்கு  கொதிக்க  

வைத்து   1 கப்  ஆகிய பின் ,  நாட்டு  சர்க்கரை  சேர்த்து  இரவு 

சாப்பாட்டிற்கு  பின்  குடிக்கவும் .  இதனை  குடிப்பதால்  

பெண்களுக்கு  ஈஸ்ட்ரோஜன்  ஆர்மோன்  பிரச்சினையும்  சரியாகும் .

அடிவயிறு  தொப்பையும்  குறையும் . 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *