தினமும் கேரட் சாப்பிடுவதால் , உடலில் உள்ள தேவையற்ற
கொழுப்புகள் நீங்கும் . குடல் புண் வராமல் தடுக்கின்றது .
கேரட் சாறுடன் , எலுமிச்சை சாறு கலந்தது குடித்தால்
பித்த கோளாறு நீங்கும் . அரைவாசி வேகவைத்த முட்டையுடன்,
கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி
அதிகரிக்கும் . வாரத்திற்கு மூன்றுமுறை கேரட் சாப்பிட்டு வந்தால்
மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம் . கேரட் சாப்பிடுவதன்
மூலம் முகப்பொலிவு ஏற்படும் . கருப்பு நிறம் உள்ளவர்கள்
அடிக்கடி கேரட் ஜூஸ் குடித்தால் அவர்களின் நிறம் சிறிது
மாறுவதுடன் தோலின் கடினத் தன்மையும் உலர் தன்மையும்
செம்மைப்படும் . இரவு உணவிற்குப் பின்னர் ஒரு கேரட்டைக்
கடித்து உண்டால் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும்
உணவுகளை வெளியேற்றுவதுடன் பற்கள் சொத்தை ஆவதைத்
தடுக்க முடியும் .
கண் பார்வை குறைபாடு பிரச்சினை இப்போதெல்லாம் சிறிய
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்தித்து
வருகின்றன . கண்களின் ஆரோக்கியத்தை நாம் கவனித்துக்
கொள்வது மிகவும் அவசியம் . பீற்றா கரோட்டின் என்ற சத்து
குறைபாட்டால் சிலருக்கு கண் மங்குதல் , கண் புரை , கண்களில்
நீர் வடிதல் , கண் சரியாக தெரியாமல் போதல் போன்ற
பிரச்சினைகள் வருகிறது . கேரட்டை பச்சையாக
சாப்பிடுகின்றவர்களுக்கு பீற்றகாரோட்டின் சத்து குறைபாடு
இல்லாமல் கண் பார்வை திறன் அதிகரிக்கும் . தினந்தோறும்
கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து
அதன் உறுதிதன்மையை அதிகரிக்கும் . நோய் எதிர்ப்பு
சக்தி அதிகரிக்கும் . தலைமுடி உதிர்வதை தடுக்கும் . வாய்
துர்நாற்றம் நீங்கும் .