ஜவ்வரிசி ஒரு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் . இது
மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்ட்ராச்சில் இருந்து
உற்பத்தி செய்யப்படுகிறது . மரவள்ளிக் கிழங்கை சுத்தம்
செய்து மாவு போல் அரைத்து பின்னர் சில செயல்முறை
செய்து ஜவ்வரிசி பெறப்படுகின்றது . இதில் அதிகளவு
காபோஹைதரேற்று மற்றும் குறைந்தளவு கொழுப்பும்
உள்ளது . புரதமும் காணப்படுகின்றது . இதில் இருக்கும்
புரதம் தசைகளை வலுவூட்டவும் , செல்களைப் புதுப்பிக்கவும்
இரத்தத்தை சீராக்கவும் உதவுகின்றது .