கோடைகாலங்களில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க நாம்
பல ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்களை எடுத்து
கொள்கின்றோம் .
அதில் எளிமையாக கிடைக்கக்கூடியது ஒன்று தான் இளநீர் .
வெயில் காலங்களில் சாலையோரங்களில் கிடைக்க
கூடியது . இளநீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் .
இது குளிர்ச்சியையும் தரும் . அதுமட்டுமல்லாது உடலுக்கு
ஆற்றலையையும் வழங்குகிறது . இளநீர் குடிப்பதால்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையையும் கட்டுப்படுத்தும்.
அதுமட்டுமல்லாது சிறுநீர்கற்கள் ஏற்படும் அபாயத்தில் இருந்தும்
நம்மை பெரிதும் உதவுகிறது . இந்த இளநீரை நாம் தினமுமே
குடிக்கலாம் . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த
ஆரோக்கியமான இளநீரை குடிக்கலாம் .