முகத் தோற்றமே விகாரமாகும் . அதனால் சொட்டை விழ
ஆரம்பிக்கும் போதே கவனித்து நடவடிக்கை எடுக்க
வேண்டும் . இல்லாவிட்டால் அது வழுக்கையில் கொண்டு
விட்டு விடும் . வழுக்கை விழப் பல காரணங்கள் இருந்தாலும்,
சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பதே வழுக்கை விழ
முக்கிய காரணம் ஆகும் . அதனால் மருத்துவரின்
ஆலோசனைப்படி வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடவேண்டும் .
இதற்கு அருமையான ஒன்று செம்பருத்தி பூ.
செம்பருத்தி பூவைச் சேகரித்து நன்கு கசக்கிச் சாறு எடுத்து
சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால் , சொட்டை
காணாமல் போய்விடும் . தினமும் செய்து வந்தால் மிகச்
சீக்கிரமாக சரியாகிவிடும் .
தாமரை இலையைப் பறித்துச் சாறு எடுத்து சம அளவு
நல்லஎண்ணெயுடன் சேர்த்து அடுப்பில் வைத்துக்
கொதிக்க விட வேண்டும் . நீர் சடசடப்பு அடங்கி தைலப்
பதத்திற்கு வந்ததும் இறக்கி கண்ணாடி பாட்டிலுக்குள்
பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் . இந்த தைலத்தை
சொட்டையான இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் அந்த
இடத்தில் முடி கருகருவென வளர தொடங்கும் .