இன்றைய காலத்தில் திருமணமான ஆனா இளம் பெண்களுக்கு குழந்தை
பாக்கியம் தள்ளி போகிறது என்று , வைத்தியரை பார்க்க சென்றால் ,
கருமுட்டை சரியாக வெடித்து வெளிய வர வில்லை என்பதும் ,
தேவையான நேரத்தில் வெளிய வர வில்லை , அவ்வாறு வெளியே
வந்தாலும் அது நல்ல நிலையில் இல்லை , ஆரோக்கியமான நிலையில்
இல்லை என மருத்துவர்கள் அனைவரும் கூறுகின்றாள் . இதன் பெயர்
போலிக் க்ளஸ்ட் ஸ்டேட்டி என்ற பெயர் . இதனால் குழந்தை பாக்கியம்
தள்ளி போகின்றது .அதாவது கருமுட்டை வெடித்து நல்ல முறையில் வெளி
வருவதற்கும் , ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கும் , தகுந்த
நேரத்தில் வெளிப்படுவதற்கும் என்ன உணவு முறைகளை நாம் கடை
பிடிக்க வேண்டும் . மாத்திரை , ஊசி ஆகியவைகளை தவிர்த்து
இயற்கையான முறையில் கருமுட்டை வெடித்து வெளி வர வைக்க
முடியும் . அதில் மிகச் சிறந்த பழங்கால காணப்படுவது திராட்சைப்பழம் ,
ஆரஞ்சு பழம் ஆகும் . இதில் இருக்க கூடிய போலிக் ஆஸிட் , அயன் ,
கால்சியம் ஆகிய சத்துக்கள் என்ன செய்கிறது என்றால் சரியான
நேரத்தில் கருமுட்டையை வெடிக்கக் வைத்து வெளிவர உதவுகிறது .
அடுத்து ஆப்பிள் மற்றும் நெல்லிக்காய் மிகச் சிறந்த பழங்களாகும் . இது
இரண்டுமே கருமுட்டை வெடிக்க செய்யக் கூடியதாகவும் உள்ளது . ஆன்டி
இம்ப்ளமெட்ரிவ் ப்ரோப்படியாகவும் இருக்கிறது . PCOS இந்த மாதிரியான
பிரச்சினைகளில் நமக்கு ஓவரியில் ஒரு வீக்கம் இருக்கும் . அதாவது இந்த
வீக்கத்தை குறைக்க ஆன்டி இம்ப்ளமெட்ரிவ் ப்ரோபட்டி இருக்க கூடிய
உணவுகள் வேண்டும் . அது இந்த ஆப்பிள் , நெல்லிக்காயில்
காணப்படுகிறது . இதன் கூடவே ஆன்டி ஆக்சிடன் காணப்படுவதால் நோய்
தொற்றுக்களையும் தடுக்கிறது.
அதிக நார்ச்சத்தும் இருப்பதால் , உடல் பருமனும் இலகுவாக குறையும்.
தினமுமே நாம் இந்த ஆப்பிள் மற்றும் நெல்லிக்காய் சாப்பிடுவதால்
ஓவுலேசன் சீக்கிரமாக நடக்கும் .
அடுத்து கீரை வகைகள் . முக்கியமாக பெண்கள் கீரைகளை மாதவிடாய்
காலங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும் . அவ்வாறு எடுக்கும் பொழுது
அதில் இருக்க கூடிய அயன் , கால்சியம் ஆகிய சத்துக்கள் என்ன
செய்கிறது என்றால் , நமக்கு கரு முட்டைகள் சரியாக வெடிக்காமல் , கரு
சிதைவு ஏற்படுகின்றதால் , அதைத் தடுக்க கூடிய தன்மை கீரைகளுக்கு
இருக்கிறது . என்ன கீரையாக இருந்தாலும் அதே தன்மை தான் . அதனால்
நாம் மாதவிடாய் காலங்களில் கீரைகளை உட்கொள்ளும் பொழுது கரு
சிதைவுகள் ஏற்படுவதை தடுத்துக் கொள்ளலாம் . கரு முட்டை வளர்ச்சியும்
ஆரோக்கியமாக இருக்கும் . கீரை வகைகள் அனைத்தும் உட்கொள்ளலாம் .
சிறிய மீன்கள் உணவில் எடுத்துக் கொள்ளலாம் . இந்த சிறிய மீன்
வகைகளை சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்றால்
, அதில் இருக்க கூடிய ஒமேகா 3 பேட்டீஅசிட் , தக்கோசோ
அக்ஸோனிக்கஸிட் இது இரண்டுமே என்ன செய்கிறது என்றால் , கரு
முட்டையின் உடைய DHA என்று கூறுகிறோம் . ஒமேகா 3பேட்டீஅசிட் , DHA
இது இரண்டும் தான் கருமுட்டையின் வளர்ச்சியை சீர்படுத்தும் . அடுத்து
அந்த கரு பதிந்து ஆரோக்கியமான கருவாக மாறி அதில் எந்த ஒரு
குறைபாடும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் .
அடுத்து நாட்டு கோழி முட்டை , இதை மாதவிடாய் நேரத்தில் எடுத்துக்
கொள்ள வேண்டும் . ஏனென்றால் , இதில் அமினோஅசிட் இருக்கிறது . இது
கருமுட்டை நல்ல படியாக வெடித்து , அது கருவாக நல்லபடியாக
உருவாகக் கூடிய ஒரு கருமுட்டையாக வருவதற்கு துணைபுரிகிறது .
நட்ஸ் வகைகளில் முக்கியமாக வால்நட் . இதில் இருக்க கூடிய மெக்னீசியம்
சத்து ஓவுலேஷனை ஏற்படுத்துகிறது . அடுத்து போஸ்ட் ஓவுலேஷனி
ஏற்படுத்துவதற்கு ப்ராஜெஸ்ட்டர் ஆர்மோனை உதவுகிறது . இரவில் 1
அல்லாது 2 வால்நட் , தண்ணீரில் ஊற வைத்து , காலையில் சாப்பிடலாம் .
ஊற வைக்காமலும் சாப்பிடலாம் . இவ்வாறு சாப்பிடும் போது
ஓவுலேஷனை ஏற்படுத்தும் சத்து கிடைக்கிறது .
அடுத்து தானிய வகைகள் , இதில் புரதம் சத்து அதிகமாக உள்ளதால் ,
அத்துடன் B காம்ளக்ஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால்
உடல் எடையை குறைத்து , ஓவுலேஷனுக்கும் துணைப்புரிகிறது .