தேவையான பொருட்கள் :-
வடை செய்ய
உளுத்தம் பருப்பு – 1கப் (250கிராம் )
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
உப்பு – தேவையான அளவு
குளிர்ந்த நீர் – தேவையான அளவு
முந்திரி பருப்பு – தேவைப்பட்டால்
திராட்சை – தேவைப்பட்டால்
தயிர் கலவை செய்ய
தயிர் – 800 கிராம்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவைக்கேட்ப
பொடித்த சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
செய்முறை :-
1. ஊறவைத்த உளுத்தம் பருப்பு , பச்சை மிளகாய் , இஞ்சி மற்றும் உப்பு
ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சிறிதளவு குளிர்ந்த நீர் சேர்த்து எடுத்துக்
கொள்ளவும் .
2. எல்லாவற்றையும் நன்றாக விழுதாக அரைக்கவும் , முந்திரி, திராட்சை
சேர்க்கவும் . கலந்து தனியாக வைக்கவும் .
3. தயிர் கலவைக்கு , ஒரு பெரிய கிண்ணத்தில் தயிர் எடுக்கவும் . உப்பு ,
தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்றாக அடிக்கவும் . பின்னர் தூள்
சர்க்கரை சேர்த்து மீண்டும் அனைத்தையும் கலக்கவும் . அதனை தனியாக
மூடி வைக்கவும் .
4. இப்பொழுது ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் .
5. மாவை எடுத்து மெதுவாக சிறு உருண்டைகளாக கடாயில் சேர்க்கவும் .
6. அனைத்து பக்கங்களிலும் பொன்னிறமாக வரும் வரை அவற்றை நன்கு
பொரித்து எடுக்கவும் .
7. கடாயில் இருந்து எடுத்து , சாதாரண நீரில் சேர்த்து 3 நிமிடம் ஊற
வைக்கவும் .
8. 3 நிமிடம் கழித்து வடைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீரை
மெதுவாக பிழிந்து, வடைகளை தயிர் கலவையை சேர்க்கவும் .
9. வடைகளை அனைத்து பக்கங்களிலும் தயிர் கலவை நன்கு
பூசப்பட்டிருப்பதை உறுதிசெய்து , பின்னர் அவற்றை குறைந்தது 2
மணித்தியாலம் குளிர்சாதனத்தில் வைக்கவும் .
10. 2 மணி நேரம் கழித்து , வடைகளை சிறிது தயிர் சேர்த்து பரிமாறும்
தட்டுக்கு மாற்றலாம் .
11. அவற்றை பச்சை சட்னி , புளி சட்னி , மிளகாய் தூள் , சாட் மசாலா தூள் ,
சேவ் , மாதுளை மற்றும் இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
கொண்டு அலங்கரிக்கவும் .
12. தயிர் வடை தயார் .