குழந்தை  வயிற்றில்  பூச்சி  இருக்கிறது , என்று  அறிந்ததும் 

சிறிய  வசம்பை  சுட்டுப்  பொடியாக்கி , சிறிது  தேனில் 

கலந்து  குழந்தையின்  நாக்கில் தடவி  கொஞ்சம்  கொஞ்சமாக 

கொடுக்க  வேண்டும் .  வயிற்றில் பூச்சி  தொல்லை  நீங்கும் . 

சிறு  குழந்தைகள்  இனிப்பு  வகைகளை  அதிகம்  உண்பார்கள் .

அதனை  அதிகம்  சாப்பிடுவதால்  பூச்சிகள்  உண்டாகும் .

இதற்கு  எளிமையான  வைத்தியம்   உண்டு . தித்திப்பு 

மாதுளையை  முதல்  நாள்   குழந்தைக்கு  சாப்பிட  கொடுத்து 

அடுத்த  நாள்   பாலில்  சிறிது  விளக்கெண்ணையை  கலந்து 

1 டீஸ்பூன்  கொடுத்தால்,  வயிற்றில்  உள்ள  பூச்சிகள்  

வெளியேறிவிடும் .

கொக்கிப்புழுக்கள்  தொந்தரவில்  இருந்து  விடுபட  துளசிச் 

சாற்றுடன் , எலுமிச்சை  சாற்றைக்  கலந்து   தினமும் குடித்து 

வரவும் . தினமும்  துளசி  இலைகளை  சிறு  மென்று  வரவும் .

இவ்வாறு  செய்தால்  புழுக்கள்   வெளியேறும் . 

கொட்டை  பாக்கை  நன்கு  சந்தானம்  போல  இழைத்து 

ஒரு  டீஸ்பூன்  பாலில்  அல்லது  நீரில்  கலந்து  

குழந்தைகளுக்கு  கொடுக்க ,  குடல்  பூச்சிகள்  

அனைத்தும்  மொத்தமாக  வெளியேறி  விடும் . 

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *