இக் காலத்தில் இதயம் சம்பந்தமான நோய்களுக்கான
பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன . அதாவது வயதானவர்களின்
இருந்து சிறியவர்கள் வரை இதயம் நோய்கள் அதிகமாகி
உள்ளது . இதயம் நோய்கள் வந்த பிறகு கஷ்டப்படுவதை விட
அது வராமல் தடுப்பதற்கு நாம் மாதுளம் பழம் சாப்பிட வேண்டும் .
இந்த மாதுளம் பழத்தை ஒரு நாளைக்கு நாம் மூன்று பழம்
சாப்பிட வேண்டும் . அல்லது ஒன்றாவது சாப்பிட வேண்டும் .
இதய நோய் வந்த அறிகுறி உள்ளவர்கள் மூன்று மாதுளம் பழம்
சாப்பிட வேண்டும் . அதாவது நமது உடலுக்கு தேவையான
ஆன்டி ஒக்சிடண்ட் கிடைக்கா விட்டாலும் இதய நோய்கள்
ஏற்படும் .
மாதுளம் பழத்தில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகின்றது .
இந்த பொட்டாசியம் நமது இதய தசைகள் சுருங்கி , விரிவதற்கு
ஆரோக்கியமாக இருப்பதற்கும் மிகவும் அவசியமாகின்றது .
100g இருக்க கூடிய மாதுளம் பழத்தில் 25mg பொட்டாசியம்
நிறைந்து காணப்படுகின்றது . இந்த பொட்டாசியம் கிடைப்பதற்கு
நாம் ஒரு நாளைக்கு மூன்று மாதுளைப்பழம் சாப்பிட்டால்
நமது உடலுக்கு ஒருநாளைக்கு தேவையான பொட்டாசியம்
கிடைத்துவிடும் . நமது உடலின் தசைகளும் ஆரோக்கியமாக
காணப்படும் . இதை சமீபகாலமாக அறிவியல் ஆராச்சியாளர்கள்
கூறுகின்றார்கள் .
இதில் ஆன்டி ஒக்சிடண்ட் காணப்படுகின்றது , அத்தோடு துவர்ப்பு
சுவையும் இதில் காணப்படுகின்றது . இது சிவப்பு நிறத்தில்
ஆனது , இதில் டேனினும் , ஆந்தசின்ஸ் இருப்பதால் இது
இரத்த குழாய்களின் உள் இரத்தம் படிவததை தடுக்கின்றது .
எவ்வாறென்றால் கெட்ட கொலஸ்ட்ரோல் படிவது போல ,
பாசி படிவது போல் , இரத்த குழாய்களில் இரத்தம் உறைவு
காணப்படும் . இதனை தடுப்பதற்கு தினமும் மாதுளைப்பழம்
சாப்பிட்டு வந்தால் இதனை தடுக்கலாம் .
மாதுளைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் ,
மன அழுத்தம் ஆகியவையும் சரியாகும் . அதைத்தவிர எந்த விதமான
உடல் உழைப்பும் இன்றி வேலை செய்பவர்கள் , அதாவது அமர்ந்தே
வேலை செய்பவர்கள் இவ்வாறானவர்களுக்கு
சீக்கிரமாக சர்க்கரை நோய் ஏற்பட்டுவிடும் . சர்க்கரை
அதிகமானால் நரம்புகள் செயலிழந்து காணப்படும் . இதனால்
தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டாலும் , அவர்களுக்கு வலி
தெரியாமலே இறந்து விடுவார்கள் . பொதுவாக சர்க்கரை
நோயாளிகளுக்கு எந்த வகையான பழங்களும் சாப்பிட
வேண்டாம் என்று கூறுவார்கள் , ஆனால் நாட்டு மாதுளை பழம்
தினமுமே சாப்பிடலாம் .
அதைத்தவிர மாதுளம் பழத்தில் வைட்டமின் c அதிகமாக
காணப்படுகின்றது . இதனால் ஈமோகுளோபின் அளவையும்
அதிகப்படுத்தும் . இது நமது உடலை சுறுசுறுப்பாக வைத்து
கொள்வதற்கு இந்த வைட்டமின் c தேவைப்படுகின்றது .
இந்த மாதுளைப்பழத்தில் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம்
நிறைந்து காணப்படுகின்றது . தினமும் மூன்று மாதுளை
பழம் சாப்பிட்டால் மாரடைப்பு இன்றியும் , வேறு நோய்களில்
இருந்தும் நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழலாம் .