இன்று அனைவரும் கற்பூரவள்ளியின் மகத்துவத்தை அறியாமலேயே இதனை வீடுகளில் வளர்க்கின்றோம் .
அதாவது கற்பூரவள்ளியின் எண்ணெய் , கற்பூவள்ளியின் சாறு மற்றும் இலைகள் ஒரு சில பக்டீரியாக்கள் , வைரஸ் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு நமது உடலுக்கு நன்மை அளிக்கின்றது .
அதாவது பொடுகு தொல்லை , தலை அரிப்பு , தலை சம்பந்தப்பட்டபிரச்சினைகளுக்கு கற்பூரவள்ளி எண்ணெயய்யுடன் , தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தலைக்கு தேய்க்கலாம் .இவ்வாறு பயன்படுத்தினால் நாளடைவில் தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகிவிடும் .
கற்பூரவள்ளியில் இரசம் வைத்தது குடித்து வந்தால் , ஆர்த்ரைடிஸ் போன்ற நோய்களில் ஏற்படும் கடுமையான எலும்பு வலிகள் சரியாகிவிடும் .
செரிமான பிரச்சினைகள் ஏற்படுமாயின் கற்பூரவள்ளி சாறுடன் , தேன் கலந்து இரண்டு டீஸ்பூன் குடித்து வந்தால் செரிமான பிரச்சினைகள் சரியாகிவிடும் .
அதை தவிர புகைபிடிப்பவர்கள் அவர்களின் உடலை கவனிப்பதே இல்லை , அதிகப்படியான புகைப்பழக்கத்திற்கு ஆளாகி , அவர்கள் உடலில் நச்சு தன்மை நிறைந்து காணப்படும் . அது மட்டுமா, இந்த நச்சு தன்மை மூளைக்கு பரவும் .
இவ்வாறு நச்சு தன்மை உடலில் சேர்ந்து நாளடைவில் இதய புற்றுநோய்க்கு ஆளாகிவிடுவார்கள் . இவ்வாறானவர்களை குணமடைய செய்ய , தினமும் கற்பூரவள்ளி கசாயம் செய்து குடித்து வந்தால் , இவர்கள் உடலில் இருக்கு நச்சுத்தன்மை படிப்படியாக குறைந்து சரியாகிவிடுவார்கள் . தொடர்ந்து 48 நாள் குடித்து வரவேண்டு . பிறகு வாரத்திற்கு மூன்று நாள் குடிக்க வேண்டும் . அதாவது இவை அனைத்தையும் புகைப்பிடித்தலை நிறுத்தி விட்டதுதான் இந்த கசாயம் குடிக்க வேண்டும் . இல்லையென்றால் பயன் அளிக்காது .
இவ்வளவு மூலிகை மருத்துவம் நிறைந்த இந்த கற்பூரவள்ளியை பயனபடுத்தி ஆரோக்கியமாக நம் உடலை பாதுகாக்கலாம் .