பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டால் , எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டாலும் அது
பிரச்சினை தான் . இதற்கு காரணமாக இருப்பது , இறுக்கமான உடைகள்
அணிவது , காற்றோட்டம் இன்றி இருப்பது . சுத்தம் இல்லாமல் இருப்பது .
சாதாரணமான நீரில் சுத்தம் செய்வது நல்லது . உங்கள் பிறப்புறுப்பு
பகுதியை சுத்தமாக உலர்வாகவும் வைத்திருங்கள் . மென்மையான
வாசனையற்ற சோப்பை பயன்படுத்தவும் . ஒவ்வொரு நாளும் உங்கள்
உள்ளாடைகளை மாற்றவும் . தளர்வான பருத்தி உள்ளாடைகளை
அணியுங்கள் . இறுக்கமான உள்ளாடைகள் அல்லது பேன்ட்களை
அணிவதை தவிர்க்கவும் . வியர்வையுடன் கூடிய அதிகப்படியான முடி
வளர்ச்சி மற்றும் சுகாதாரமின்மை ஆகியவை தொற்று நோயை
வரவைக்கலாம் .