பனிக்குட நீர் அதிகமாக இருந்தால் ஆபத்து . அளவுக்கு அதிகமாக
இருந்தால் பிரச்சினைதான் . பனிக்குட நீர் அதிகமாக இருந்தால் ,
சாதரணமாக 5 மாதம் என்றால் , கர்ப்பிணி பெண்களின் வயிறு மிகவும்
பெரிதாக இருக்கும் , 6,7 மாதம் போல தெரியும் . வயிறு வளர்ச்சி ஒரு மாத
வித்தியாசம் காணப்படும் . நீர் அதிகமாக இருந்தால் தாயிற்கு சர்க்கரை
நோய் அல்லது வேறு எதாவது பிரச்சினை உள்ளதா என கவனிக்க
வேண்டும் . குழந்தையின் வளர்ச்சியை பார்க்கும் பொழுது குழந்தையின்
உள் உறுப்புகள் சரி வர உள்ளதா என கண்டறிய வேண்டும் . சில நேரம்
குழந்தைகளின் உணவு குழாய்களில் பிரச்சினை ஏற்படலாம் . உணவு
குழாய் , மூச்சு குழாய்களில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படலாம் . நீர் சத்து
அகிமானாலும் சில நேரம் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாமலும்
இருக்கும் .
ஆனால் , பனிக்குடம் உடையாமல் கவனமாக இருக்க வேண்டும் .
இல்லையென்றால் தொப்புள் கொடி ஆனது கர்ப்பப்பையை விட்டு சீக்கிரம்
வெளிய வர பார்க்கும் . இவ்வாறு ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் .
அதிகப்படியான ஓய்வு எடுக்க வேண்டும் . தேவையற்ற பாரமான
பொருட்களை தூக்குவதை தவிர்ப்பது நல்லது . படிகட்டுகளில் ஏறி
இறங்குவதை தவிர்ப்பது நல்லது . நீர் சத்து அதிகமாக இருந்தால்
முக்கியமாக மருத்துவரிடம் சென்று தாயுடைய ஆரோக்கியத்தையும் ,
குழந்தையின் வளர்ச்சியையும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது .
பனிக்குட நீர் என்றால் என்ன ?
ஒரு பெண் கர்ப்பத்தின் போது , கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையை
சுற்றி ஒரு நீர் படலம் இருக்கும் . இந்த நீர்படலம் தான் பனிக்குட நீர்
அல்லது அம்னோடிக் திரவம் என்று அழைக்கப்படும் . பனிக்குட நீர்
நிறமற்றது . வெள்ளையாகவோ அல்லது இளஞ்சிவப்பாகவோ இருக்கலாம் .
பனிக்குட நீர் சீராக இருந்தால் தான் குழந்தையின் சுவாசம் இயல்பாக
இருக்கும் . குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும் . ஒரு சில கர்ப்பிணிக்கு
பனிக்குட நீர் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் .
இவ்வாறு ஏற்பட்டால் குழந்தைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் .