கர்ப்பமாக  இருக்கும்  பொழுது  நீர்  சத்து  குறைவாக  இருந்தால்  நாம்

 எவ்வாறு  அதனை  அதிகரிக்கலாம்   செய்யலாம் . நீர்  சத்து  குறைவாக 

 இருக்கிறது  என்று  ஸ்கேன்  செய்து  பார்க்கும்  பொழுதுதோ , அல்லது  வயிறு

  தேவையான  அளவு வளர்ச்சி  இல்லாமல்   சிறியதாக  இருக்கின்ற  மாதிரி 

 இருந்தால்  , நீர்  சத்து  குறைவாக  இருக்கிறது  என்று  மருத்துவர்கள் 

 கூறுவார்கள் . நீர்  சத்து  குறைகிறது  என்றால்  முதல்  விடயமாக 

 குழந்தைக்கு  கிட்னி  சரியாக  வளர்கின்றதா ?  இல்லை  வேறு  எதாவது  ஒரு

  சில  பதிப்புகள்  இருக்கின்றதா  என  மருத்துவர்கள்  ஸ்கேன்  செய்து  பார்த்து

  அறிவிப்பார்கள் . அடுத்து  கர்ப்பிணி  தாய்க்கு  அதிகமாக  வாந்தி 

 ஏற்படுத்தலும்  நீர்  சத்து  குறைவதால்  ஏற்படும் . அல்லது  சாப்பிட 

 முடியாமல்  இருப்பது , அல்லது  வேறு  ஏதாவது  பிரச்சினைகள்  உள்ளதா  என

  அறிந்துகொள்ள  வேண்டும் . 

வேறு  ஏதும்  காரணங்கள்  இல்லை  என்றால் , மருத்துவர்கள்  நீர்  சத்து 

 குறைவாக  இருக்கிறது  என  கண்டறிது  கூறுவார்கள் .  கர்ப்பிணி

  தாய்மார்கள்  தண்ணீர்  சரியாக  அருந்துகின்றார்களா ? நன்றாக 

 சாப்பிடுகின்றார்களா? என  வீட்டில்  உள்ளவர்கள்  கவனித்துக்  கொள்ள

  வேண்டும் . 

1. கர்ப்பிணிப்பெண்கள்  3-4 லீற்றர்  தண்ணீர்  குடிக்கவேண்டும் .

2. நிறைய  நீர்ச்சத்து  உள்ள  பழங்கள்  சாப்பிட  வேண்டும் .

3. புரதம்  சத்து  அதிகம்  உள்ள  உணவுகளை  சாப்பிட  வேண்டும் .

உதாரணமாக :- முட்டை , பருப்பு , நட்ஸ்  

4. கர்ப்பிணிப்பெண்கள்  பகல்  நேரத்தில்  நித்திரை  கொள்ளும்  போது  இடது 

 பக்கமாக  சாய்ந்து  நித்திரை  கொள்ள  வேண்டும் . 

இதன்  காரணம்  என்ன  என்றால் , இடது  பக்கமாக  நித்திரை  கொள்ளும்

   போது   கர்ப்பப்பைக்கு   செல்லும்  இரத்த  ஓட்டம்  அதிகரிக்கும் .  இவ்வாறு

  இரத்தம்  ஓட்டம்  அதிகரித்தால்  குழந்தைக்கு  செல்லும்  இரத்தம் 

 அதிகமாகும் , இதனால்  நீர்ச்சத்தும்  அதிகமாகும் . 

நீர்ச்சத்து  என்றால்  என்ன ? எவ்வாறு  உருவாகிறது என்றால் ?

குழந்தையை  சுத்தி  இருக்கின்ற  பனிக்குட  நீர்  வந்து எதனால்  உருவாகிறது

  என்றால் , குழந்தையுடன்  எச்சில் , குழந்தையின்  சிறுநீர்  இதான் ,

 குழந்தையை  சுற்றி  அம்மாவின்  வயிற்றில்  பனிக்குட  நீராக  வருகிறது . 

நீர்ச்சத்து  குறைகிறது  என்றால்  முதல்  விடயம்  குழந்தைக்கு  செல்லும் 

 ஊட்டச்சத்து  குறைகிறது  என்று  அர்த்தம் .  அந்த  நஞ்சு கொடி  வழியாக

  பில்ட்டர்  ஆகி  செல்கின்ற  இரத்த  ஓட்டம் சரியாக இருக்கிறதா  என  அறிந்து

  கொள்ள  வேண்டும் .

இதனை  சரி  செய்ய  தண்ணீர்  அதிகளவில்  குடிக்க  வேண்டும் . புரத 

 உணவுகளை  அதிகமாக  சாப்பிட  வேண்டும் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *